/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 10, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு விழா 10, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
10, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
10, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
10, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 01, 2025 01:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, நமது பாப்பிரெட்டிப்பட்டி நண்பர்கள் குழு சார்பில் பாராட்டு விழா, குழு காமேதேஷ் தலைமையில் நடந்தது. ஆசிரியர் மாரி கருணாநிதி வரவேற்றார்.
நிகழ்வில், தி.மு.க., வர்த்தகர் அணி துணை செயலாளர்
சத்யமூர்த்தி, தொழிலதிபர் ஜான்சன் பாபு மற்றும் கல்வியாளர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை, சான்றிதழ்கள், நினைவு பரிசு வழங்கி பேசினர். இதே போன்று, பாப்பிரெட்டிப்பட்டி குழு சார்பில் நடந்த, கோடைகால கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.