/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 20, 2024 06:17 AM
அரூர்: அரூரில், உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் துவங்கிய ஊர்வலத்தை, அரூர் டி.எஸ்.பி., ஜெகன்நாதன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லுாரி மாணவ, மாணவியர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் கல்லுாரியில் நிறைவடைந்தது.