/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மா விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்மா விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
மா விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
மா விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
மா விவசாயிகளை பாதுகாக்க முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
ADDED : மே 31, 2025 06:51 AM
தர்மபுரி: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் நக்கீரன், செயலாளர் முருகன் உள்ளிட்டோர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டம், வீராசனுார், மல்லுப்பட்டி, மதகிரி, மாரவாடி, குண்டாங்காடு, நீலகிரிகொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மா விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை வெளி மாநிலங்கள், வெளிநாடு மற்றும் ஜூஸ் பேக்டரிகளுக்கு ஏஜென்டுகள், வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. சிலர் மண்டிகளிலும் விற்பனை செய்கின்றனர். இதில், மா விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. ஏஜென்டுகள், இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மிக குறைவான விலை கிடைப்பதால், மாங்காய் அறுவடை செய்யாமல் மரத்திலேயே அழுகி நாசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாங்காய்களின் தரத்தை பொறுத்து கிலோ, 20 முதல், 25 ரூபாய் வரை கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். எனவே விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள், அலுவலர்களுடன் முத்தரப்பு கூட்டம் நடத்தி, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.