/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போச்சம்பள்ளியில் அரிய வகையான 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தைபோச்சம்பள்ளியில் அரிய வகையான 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தை
போச்சம்பள்ளியில் அரிய வகையான 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தை
போச்சம்பள்ளியில் அரிய வகையான 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தை
போச்சம்பள்ளியில் அரிய வகையான 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தை
ADDED : ஜன 07, 2024 10:47 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், சந்துார் செல்லும் சாலையிலுள்ள ஜவுளிக்கடை பாத்ரூமில் அதிசய ஆந்தை இருப்பதை கடை ஊழியர்கள் கண்டனர். அது அரிய வகையான, 'சாக்குருவி' என்ற கூகை இன ஆந்தை என தெரிய வந்தது. இந்த வகை ஆந்தை, வட்ட வடிவ முகத்துடன், சாம்பல் நிறத்தில் இருந்தது. இவ்வகை ஆந்தை பழங்கால கோட்டைகள், பாழடைந்த வீடுகள் புழக்கத்தில் இல்லாத கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பதுங்கியும், இரவில் உணவு தேடியும் செல்லும்.
இந்த வகை ஆந்தைக்கு பகலில் பார்வை குறைபாடு இருப்பதால், இவை இரவில் மட்டுமே இரை தேடும். இது, சிட்டுக்குருவி, எலி போன்றவற்றை உணவாக்கிக் கொள்ளும். இந்த வகை ஆந்தை பல்வகை குரலில்
கரகரப்பாக கத்துவதால், திட்டுவது போல் சத்தம் கேட்கும். இந்த ஆந்தையை சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். பின்னர் ஆந்தை, தொப்படி குப்பம் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விடப்பட்டது.