ADDED : ஜூலை 05, 2024 12:05 AM
அரூர்: அரூர் சப்-டிவிஷனில் கடந்த, ஜூன்., 1 முதல், 30 வரை, சாராயம் காய்ச்சுதல் மற்றும் மது விற்பதாக, 78 வழக்குகள் பதிவு செய்து, 2 பெண்கள் உள்பட, 78 பேரை சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 31 டூவீலர், 2,422 மதுபாட்டில்கள் மற்றும், 59 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.