/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/'தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,421 விபத்தில் 350 பேர் உயிரிழப்பு''தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,421 விபத்தில் 350 பேர் உயிரிழப்பு'
'தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,421 விபத்தில் 350 பேர் உயிரிழப்பு'
'தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,421 விபத்தில் 350 பேர் உயிரிழப்பு'
'தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,421 விபத்தில் 350 பேர் உயிரிழப்பு'
ADDED : பிப் 06, 2024 10:20 AM
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த, 1,421 சாலை விபத்துகளில், 350 பேர் பலியாகி உள்ளனர்,'' என, தர்மபுரி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மற்றும் தர்மபுரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, வாகன ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் கீதாராணி முன்னிலை வகித்தார். மாநில லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் நாட்டான்மாது வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ., தாமோதரன் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2023ல் மொத்தம், 1,421 சாலை விபத்து நடந்துள்ளது. இதில், 350 பேர் இறந்துள்ளனர். இந்த சாலை விபத்துகளில் மொத்தம், 1,721 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2022 ல் நடந்த சாலை விபத்தை விட, 38 உயிரிழப்புகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, அரசின் நடவடிக்கையால் சாலை விபத்து குறைந்து வருகிறது. தொப்பூர் கணவாயில் நடக்கும் தொடர் சாலை விபத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், ஓட்டுனர்களின் அஜாக்கிரதையால் தான், அதிகளவில் விபத்து ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து, வாகன ஓட்டுனர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், லாரி டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், தனியார் பள்ளி,- கல்லுாரியின் பஸ் டிரைவர்கள், வேன், டூரிஸ்ட் கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சையத் அப்சல் நன்றி கூறினார்.