Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதி மீறிய மருந்து கடைகள் மீது சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

விதி மீறிய மருந்து கடைகள் மீது சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

விதி மீறிய மருந்து கடைகள் மீது சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

விதி மீறிய மருந்து கடைகள் மீது சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை

ADDED : ஜூலை 24, 2024 02:15 AM


Google News
தர்மபுரி;தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், மருந்து கட்டுப்பாடு துறை சார்பாக கடந்த ஜன., 2023 முதல் ஜூன்., -2024 வரை சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்து கடைகள், தனியார் பதிவு பெற்ற மருத்துவர்களின் கிளினிக், அரசு மருத்துவ மொத்த மருந்து சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு மருந்துவமனை மருந்தகங்கள், ரத்த வங்கி மற்றும் ரத்த சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 21 மருந்து கடைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், சட்ட விதிமீறல் செய்த, 8 மருந்து கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மருந்து கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக, 6.50 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறை தண்டனையும், தரமற்ற மருந்து விற்றதற்காக, 2 வழக்குகளில் அதை தயாரித்து விற்ற, மருந்து நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக, 65,000 ரூபாய் அபாரதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விதி மீறல் செய்த, 6 மருந்து கடைகளின் மீது, மருந்துகள் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்து கடைகள் மீது மருந்து கட்டுப்பாடு துறை மூலம், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us