புகையிலை பொருட்கள் வாகனம் பறிமுதல்
புகையிலை பொருட்கள் வாகனம் பறிமுதல்
புகையிலை பொருட்கள் வாகனம் பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2024 02:15 AM
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் கல்கூடப்பட்டி பகுதியில் பாலக்கோடு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வழியாக வந்த பிக்கப் வாகனம் நிற்காமல் சென்றது. அதனை துரத்தி சென்று, மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அதனை பாப்பாரப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், 28 என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதில், 20 ஆயிரம் மதிப்பிலான, 33 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, ராமச்சந்திரனை பாலக்கோடு போலீசார் கைது செய்தனர்.