டூவீலரிலிருந்து விழுந்த இருவர் பலி
டூவீலரிலிருந்து விழுந்த இருவர் பலி
டூவீலரிலிருந்து விழுந்த இருவர் பலி
ADDED : ஜூலை 29, 2024 02:14 AM
மகேந்திரமங்கலம்: பாலக்கோடு அடுத்த, வேலாவள்ளியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பழனிசாமி, 40; இவர் கடந்த, 10 ல் தன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சா-லையில், பொம்மனுார் மேம்பாலம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்கு பெங்க-ளூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கடந்த, 26 அன்று இறந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* காரிமங்கலம் அடுத்த, ராமபுரத்தை சேர்ந்த வேடியப்பன், 55; இவர் கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த, 26 அன்று அவருடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, காரிமங்கலம் அருகே, சர்வீஸ் சாலையில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயம-டைந்தவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.