/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : ஜூலை 29, 2024 02:13 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இட-மாற்றம் செய்து, சேலம் டி.ஐ.ஜி., உமா உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பாகலுாருக்கும், சேலம் மாவட்டம் கருமலைகூடல் இன்ஸ்பெக்டர் முருகன், ஊத்தங்கரைக்கும், அங்கு பணியாற்றிய கந்தவேல், தலைவாசலுக்கும், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்-டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சர-வணன், காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டராகவும், தேன்கனிக்-கோட்டை இன்ஸ்பெக்டர் தவமணி, நாமக்கல் மாவட்டம் குமார-பாளையத்திற்கும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், தேன்கனிக்கோட்டைக்கும், பாகலுார் இன்ஸ்-பெக்டர் பாரதிமோகன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா, சூளகிரி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்-டுள்ளனர்.
காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் பாலாஜிரமணன், சேலம் மாவட்டம் மல்லுாருக்கும், அங்கு பணியாற்றிய பத்மாவதி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், குருபரப்பள்ளி இன்ஸ்-பெக்டர் தொல்காப்பியன், சேலம் மாவட்டம் கொளத்துாருக்கும், இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சுமித்ரா, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், பர்கூர் அனைத்து மகளிர் இன்ஸ்-பெக்டர் லதா, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி, நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த-குமார், நாமக்கல் மாவட்டம் பேளுகுறிச்சிக்கும், ஏற்காடு இன்ஸ்-பெக்டர் நாகராஜ், ஓசூர் டவுனுக்கும், கல்லாவி இன்ஸ்பெக்டர் தமிழரசி, சேலம் இரும்பாலை மதுவிலக்கு பிரிவுக்கும், ஊத்தங்-கரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, சங்ககிரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராகவும், சூளகிரி இன்ஸ்பெக்டர் தேவி, மகாராஜகடை இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்குமார் குருபரப்பள்ளிக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட குற்-றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய ஜாபர்உசேன், கல்லா-விக்கும், தர்மபுரியில் பணியாற்றிய ஆனந்தலட்சுமி, பர்கூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்-டுள்ளனர்.
இதேபோல, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்-டங்களுக்கு உட்பட்ட சேலம் சரகம் முழுவதும் மொத்தம், 56 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.