/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இரண்டு வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் திருட்டு இரண்டு வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் திருட்டு
இரண்டு வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் திருட்டு
இரண்டு வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் திருட்டு
இரண்டு வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் திருட்டு
ADDED : ஜூன் 11, 2024 08:44 PM
தொப்பூர்:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி, 73. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். மகன் ஓசூரில் பணியாற்றி வருகிறார். இதனால் வீட்டில் லட்சுமி தனியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவிலிருந்த, 3 சவரன் நகையை திருடிச் சென்றனர்.
அதேபோல், தண்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் தனம், 64; ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர். வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவிலிருந்த, 3 சவரன் நகையை திருடி சென்றனர். இருசம்பவங்கள் குறித்தும், தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.