குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2024 04:07 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு, காய்கறிகள் விற்பனை செய்யவும், அதை வாங்கிச் செல்லவும் என ஏராளமான மக்களும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, உழவர் சந்தை அருகே, பஞ்., நிர்வாகம் சார்பில் ஒரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இதில் தண்ணீர் வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இதில் தண்ணீர் வருவதில்லை. இதனால், இந்த உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இத்தொட்டியின் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதால், இதில் தண்ணீர் வராமல் போய் உள்ளது. விவசாயிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வரும் நுகர்வோரின் நலன்கருதி, இந்த தண்ணீர் தொட்டியில் மீண்டும் தண்ணீர் வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.