/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் 'லோக் அதாலத்' ரூ.4.85 கோடிக்கு தீர்வு தர்மபுரியில் 'லோக் அதாலத்' ரூ.4.85 கோடிக்கு தீர்வு
தர்மபுரியில் 'லோக் அதாலத்' ரூ.4.85 கோடிக்கு தீர்வு
தர்மபுரியில் 'லோக் அதாலத்' ரூ.4.85 கோடிக்கு தீர்வு
தர்மபுரியில் 'லோக் அதாலத்' ரூ.4.85 கோடிக்கு தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 04:07 AM
தர்மபுரி: தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த, லோக் அதாலத்தில், 4.85 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக, தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவருமான ஆனந்த்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக, நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீர்த்து வைக்க, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற 'லோக் அதாலத்' நேற்று நடந்தது. அதேபோல், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும், 'லோக் அதாலத்' நடந்தது.
இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள, 2,563 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு அதில், 1,429 வழக்குகளுக்கு சமரசம் பேசி, 2.59 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. வங்கி வாராக்கடன், 279 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 92 வழக்குகளுக்கு சமரசம் செய்து மொத்தம், 2.25 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம், 2,842 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 1,521 வழக்குகள் சமரசம் பேசியதில், 4.85 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.