/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூன் 18, 2024 11:43 AM
தர்மபுரி: தர்மபுரியில், தருமம் அறக்கட்டளையினர், பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் முதுகம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம், 43, கடந்த, 3 மாதமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். குடும்ப வறுமையால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் குடும்பத்தினர் தவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் சண்முகம் இறந்தார். அவருக்கு, ராதிகா, 33 என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 11 மற்றும் 9 வயதில், 2 மகள்களும் உள்ளனர். வறுமையில் தவித்த இவர்கள், தருமம் அறைக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து உதவி கேட்டனர். அவர்கள், முதுக்கம்பட்டியிலுள்ள சண்முகத்தின் வீட்டுக்கு சென்று, முதற்கட்டமாக, 10,000 ரொக்கமும், 3,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களையும் வழங்கினர். மேலும், அரசு பள்ளியில் படிக்கும், சண்முகத்தின், 3 குழந்தைகளின் ஐந்தாண்டு கல்வி படிப்பு செலவை, அவர்களே ஏற்பதாக உறுதியளித்தனர்.