ADDED : ஜூலை 21, 2024 09:30 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே அள்ளப்ப-டாமல் உள்ள குப்பையால் பொதுமக்கள் அவதிப்-பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூரிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகே, ஏராளமான குடியிருப்-புகள் உள்ளன. மருத்துவமனை முன் தொப்பூர் பஞ்., நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்-கப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் குப்பையை இத்தொட்டியில் கொட்டி வருகின்றனர்.
ஆனால், ஒருசிலர் குப்பையை தொட்டியின் வெளிபுறத்தில் கொட்டிச் செல்கின்-றனர். இதை, பஞ்., நிர்வாகத்தினர் முறையாக அள்ளாததால், குப்பை காற்றில் பறந்து மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கே செல்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பை அதே இடத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகு-தியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு வரும் விவசாயிகள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அள்ளப்படாமல் உள்ள குப்பையை, பஞ்., நிர்-வாகம் உடனடியாக அள்ளி அப்பகுதியை துாய்-மைப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.