/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பையர்நத்தத்தில் மக்கள் மறியல் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பையர்நத்தத்தில் மக்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பையர்நத்தத்தில் மக்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பையர்நத்தத்தில் மக்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பையர்நத்தத்தில் மக்கள் மறியல்
ADDED : ஜூலை 19, 2024 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர் நத்தம் ஊராட்சியில் பையர்நத்தம், கதிரபுரம் குறிஞ்சி நகர், ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிஞ்சி நகரில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர், வாணியாறு அணை நீர் ஓரளவுக்கு வருகிறது. இருந்தபோதிலும், மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான உப்பு தண்ணீர் வழங்க ஆழ்துளை கிணறு மூலம், தண்ணீர் எடுத்து சின்டெக்ஸ் டேங்கில் விடப்பட்டது.
தற்போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டதால், தண்ணீர் கிடைக்காமல், மக்கள் அவதி பட்டனர். இதேபோன்று தெருவிளக்கு எரியாததால், குறிஞ்சி நகர் இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலை, குறிஞ்சி நகரில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன், ஊராட்சி செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.