Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 தனியார் பஸ்கள் மோதிய இடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு

2 தனியார் பஸ்கள் மோதிய இடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு

2 தனியார் பஸ்கள் மோதிய இடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு

2 தனியார் பஸ்கள் மோதிய இடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு

ADDED : ஜூலை 19, 2024 01:29 AM


Google News
பாலக்கோடு: சர்க்கரை ஆலை அருகே, பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்-துக்குள்ளான இடத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பாரதியார் நகர் அருகே கடந்த, 15ல் மாலை, 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதின.

இதில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்-களை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின், விபத்தில் படுகாயமடைந்த, 21 பேருக்கு தலா, ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு, 50,000 நிவார-ணத்தை அறிவித்து, நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திம்மம்பட்டி முதல் மல்லுப்-பட்டி வரை, தார்ச்சாலை வழுவழுப்பாக உள்ளது.

இதனால், சிறிய அளவில் மழை பெய்தாலும், வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்படுவது கண்டறியப்பட்டது. அச்-சாலையை புதிய தார்ச்சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, ஆர்.டி.ஓ., காயத்திரி, மாவட்ட வட்டார போக்குவரத்து அலு-வலர் தாமோதரன், டி.எஸ்.பி., சிந்து உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us