Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'தர்மபுரி மக்களுக்காக என் உழைப்பு தொடரும்'

'தர்மபுரி மக்களுக்காக என் உழைப்பு தொடரும்'

'தர்மபுரி மக்களுக்காக என் உழைப்பு தொடரும்'

'தர்மபுரி மக்களுக்காக என் உழைப்பு தொடரும்'

ADDED : ஜூன் 05, 2024 03:01 AM


Google News
தர்மபுரி:''தர்மபுரி மாவட்ட மக்களுக்காக என் உழைப்பு என்றும் இருக்கும்,'' என, பா.ம.க., வேட்பாளர் சவுமியா கூறினார்.

தர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட சவுமியா, தி.மு.க., வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்தார்.

இதைதொடர்ந்து, நேற்று ராஜாபேட்டையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தல் முடிவுகளில் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். பா.ம.க., சார்பாக போட்டியிட வாய்ப்பளித்த, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு நன்றி.

என்னுடன் தேர்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினர், எங்கள் கூட்டணி மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்கள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., வேட்பாளர் மணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்வி, மக்களுக்கு இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது. தர்மபுரி தொகுதியில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்திருந்தால், நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருப்பேன்.

தர்மபுரி மக்களுக்காக என் உழைப்பு என்றும் இருக்கும். தர்மபுரியை நான் தாய் வீடாகத் தான் பார்க்கிறேன்.

வெற்றி பெற்றவர்கள், எத்தனையோ வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அதுதான் நியாயம்.

தர்மபுரி தொகுதிக்கு காவிரிநீர் கொண்டு வருகிறேன் என, மேடைக்கு ‍மேடை வாக்குறுதி கொடுத்தவர்கள் அதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us