/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 04, 2024 04:53 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், வீடுகளில் சேகரிக்கும் குப்பையை தரம் பிரித்து வழங்க, துாய்மை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில், 130 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், வார்டுகளிலுள்ள குடியிருப்புகளில் காலை நேரத்தில் வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். இதை ஓரிடத்தில் சேகரித்து வைத்து, பின் தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியிலுள்ள குப்பை சேமிப்பு கிடங்கில் கொட்டுகின்றனர்.
இந்நிலையில், குப்பை சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
ஆனால், பொதுமக்கள் யாரும் குப்பையை தரம் பிரிப்பதில்லை. இதனால், துாய்மை பணியாளர்களே குடியிருப்பு பகுதியில் குப்பை வண்டியை நிறுத்தி, மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கின்றனர். இதனால், காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வீடுகளில் குப்பையை கொடுக்கும் பொதுமக்கள் அவர்களாவே குப்பையை தரம் பிரித்து தரவேண்டும் என்று, துாய்மை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.