/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை பேஸ்புக்கில் பதிவிட்ட தி.மு.க.,வினர் தர்மபுரி தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை பேஸ்புக்கில் பதிவிட்ட தி.மு.க.,வினர்
தர்மபுரி தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை பேஸ்புக்கில் பதிவிட்ட தி.மு.க.,வினர்
தர்மபுரி தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை பேஸ்புக்கில் பதிவிட்ட தி.மு.க.,வினர்
தர்மபுரி தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை பேஸ்புக்கில் பதிவிட்ட தி.மு.க.,வினர்
ADDED : ஜூன் 07, 2024 08:19 PM

அரூர்:தர்மபுரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, தி.மு.க., வேட்பாளர் வக்கீல் மணி, அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்த பதிவு முதல்வர் ஸ்டாலினின் பேஸ்புக்கில் வெளியானது.
தொடர்ந்து, சிறிது நேரத்தில் அதே பேஸ்புக் பதிவில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர், 'தர்மபுரி மாவட்ட, தி.மு.க.,வில் ஜாதி தீண்டாமை தலை விரித்தாடுவதாக பதிவிட்டது' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
கட்சியில் ஒன்றிய, பேரூர் செயலர்களின் ஜாதி தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தலைவரே அதை கொஞ்சம் தயவுசெய்து கவனியுங்க. அடுத்த தலைமுறையினருக்கு, ஒரு நல்ல அரசியலை கற்றுத்தரும் பேரூர், ஒன்றிய செயலர்களை நியமித்தால் தான் நம் திராவிட முன்னேற்ற கழகத்தை, யாராலும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு அசைக்க முடியாது.
இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன் தான் தங்கராஜ், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது இளைஞரணியில் பொறுப்பு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரை கட்சியில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை மிரட்டி வருகிறார். தங்கராஜ் தான் ஜாதி அரசியல் செய்து வருகிறார்' என்றனர்.