/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வேட்டை துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு? வேட்டை துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு?
வேட்டை துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு?
வேட்டை துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு?
வேட்டை துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் சாவு?
ADDED : ஜூன் 07, 2024 07:49 PM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி பகுதியில், ஜூன் 5 இரவு அங்குள்ள வனப்பகுதிக்கு மான் வேட்டைக்கு சிலர் சென்றுள்ளனர். அப்போது, கள்ள நாட்டுத்துப்பாக்கியால் மானை சுட்டபோது தவறுதலாக வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது உடலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் அடக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்ட போது, ''அது போன்ற தகவல் எதுவும் வரவில்லை; தொடர்ந்து விசாரிக்கிறேன்,'' என்றார்.
கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் கோட்டப்பட்டி பகுதியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.