/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொப்பையாறு அணை சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம் தொப்பையாறு அணை சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
தொப்பையாறு அணை சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
தொப்பையாறு அணை சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
தொப்பையாறு அணை சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 21, 2024 09:27 AM
தொப்பூர், : தொப்பையாறு அணை அருகே, உடைந்த சாலை பகுதியில், தடுப்பு சுவர் கட்டும் பணி, 3.20 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் பஞ்., உட்பட்ட தொப்பையாறு அணை பகுதி வழியாக, தொப்பூர் - பொம்மிடி பிரதான சாலை உள்ளது. இது, தினமும் ஆயிரக்கணக்-கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. தொடர் மழையால், 2022 டிச., 11ல் தொப்பையாறு அணை முழுகொள்ள-ளவை எட்டியது. அப்போது, அணை பகுதியில் இருந்த, தார்ச்சாலை மற்றும் சிறு பாலம், டிச., 23ல் உடைந்து தண்ணீரில் மூழ்கியது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அணையிலிருந்த தண்ணீர் பாசனத்திற்கு திறக்-கப்பட்ட பின், உடைந்த சாலை பகுதியில், புதிய தடுப்பு சுவர் கட்ட, ஒருங்கிணைந்த சாலை மேம்-பாட்டு திட்ட நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 2023 மார்ச், 25ல் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு, சாலையின் மறு பகுதியில் அணைக்கு தண்ணீர் வருவதற்கு முன், தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பான சாலையாக மாற்ற, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஒருங்கி-ணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், 3.20 கோடி ரூபாய் மதிப்பில், அணை பகுதி சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.