/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு
விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு
விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு
விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : ஜூலை 21, 2024 09:27 AM
தர்மபுரி, : பாலக்கோடு பகுதியில் அதிகாரிகளின் வாகன சோதனையில், சாலை விதிகளை மீறிய, 8 வாக-னங்களுக்கு, 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்-பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்து ஏற்படுவதை தடுக்க, தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆலோசனை படி, ஆர்.டி.ஓ., தாமோதரன் தலைமையில், பிரேக் இன்ஸ்-பெக்டர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல், காடுசெட்டிப்பட்டி வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகேந்திரமங்கலம் அருகே, அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 3 பொக்லைன் வாக-னத்திற்கு தலா, 30,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, சட்டவிரோதமாக ஆட்-களை ஏற்றிச் சென்ற, 2 மினி சரக்கு லாரி, மற்றும் அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி அதி-வேகமாக சென்ற, 3 தனியார் பள்ளி பஸ்கள் என, 5 வாகனங்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.நேற்று நடந்த வாகன சோதனையில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு, 1.40 லட்சம் ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டு, 2 சரக்கு லாரிகள் பறி-முதல் செய்யப்பட்டு, மகேந்திரமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக, சாலை விதிமுறைகளை மீறி, சரக்கு ஆட்டோ, மினி லாரிகளில் பயணிகளை ஏற்றிச்-செல்வது, மொபைலில் பேசி கொண்டு வாகனங்-களை இயக்கினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, ஆர்.டி.ஓ., தாமோதரன் எச்ச-ரித்துள்ளார்.