/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூலை 24, 2024 02:16 AM
தர்மபுரி:விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின், நினைவு தினம் நேற்று தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில், 99 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவரின் உருவபடத்தை, மாவட்ட கலெக்டர் சாந்தி திறந்து வைத்து மலர்துாவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி, அந்த மணிமண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர்துாவி மரியாதை செலுத்தினர். ஆர்.டி.ஓ., காயத்ரி, தாசில்தார் லட்சுமி, டி.எஸ்.பி., மஹாலட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.