ADDED : ஜூலை 24, 2024 02:16 AM
தர்மபுரி:தர்மபுரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தர்மபுரி நெசவாளர் காலனியிலுள்ள செங்குந்தர் மஹாலில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். இதில், 'கண்ணதாசன் புகழுக்கு பெரிதும் காரணம் தத்துவ பாடல்களா அல்லது காதல் பாடல்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கவிஞர் நெல்லை ஜெயந்தா நடுவராக இருந்தார். 'தத்துவ பாடல்களே' என்ற தலைப்பில், முனைவர் சிவகுருநாதன் வாதிட்டார். 'காதல் பாடல்களே' என்ற தலைப்பில் முனைவர் சந்திரபுஷ்பம் வாதிட்டார். அப்போது இருவரும், கண்ணதாசன் பாடல்களை பாடி பேசினர். நிறைவில் கண்ணதாசன் புகழுக்கு பெரிதும் காரணம், தத்துவப் பாடல்களே என நடுவர் தீர்ப்பளித்தார். நிகழ்ச்சியில், தர்மபுரி தமிழ்ச் சங்க செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.