/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
நல்லம்பள்ளியில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 29, 2024 02:08 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, 3,000 ஆண்டுக்கு முந்தைய, பெருங்கற்-கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை சார்பில், இளந்திரையன், கணேஷ், தர்ம-புரி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் சந்திரசேகர், உதவி பேராசி-ரியர்கள் செல்வராஜ், விஜய் மற்றும் வரலாற்று மாணவர்கள், அஜ்-ஜிப்பட்டியை ஒட்டிய வனப்பகுதியில், பெருங்கற்கால ஈமச்சின்-னங்கள் மற்றும் தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் சந்திர-சேகர் கூறியதாவது: நல்லம்பள்ளி அருகே, 3,000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் கண்ட-றிப்பட்டது. அக்காலத்தில் யாரேனும் இறந்தால், பெரிய பள்ளம் தோண்டி, 4 பக்கமும், 6 முதல், 8 அடி நீள பெரிய பலகை கற்-களை கொண்டு சவகுழியை தயார் செய்து, அதன் மேல் பெரிய கல்லை கொண்டு மூடுவது வழக்கம். இதன் எடை, 5 முதல், 10 டன் வரை இருக்கும். மேலே மண் கொண்டு மூடி, சுற்றிலும் வட்டமாக, வட்ட வட்ட கற்களை கொண்டு ஒரு ஈமக்குழி அமைப்பர். இது கல்வட்டம் என அழைக்கப்படும். இதுவே, பிற்-காலத்தில் டால்மென்ட் எனப்படும் கல் பதுக்கைகளாக மாறியது. புதையல் கிடைக்கும் என சிலர் இவற்றை சேதப்படுத்தி வரு-வதால், இவற்றை நினைவிடமாக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.