Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 251 கிராம பஞ்.,ல் ஒகேனக்கல் குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டுகோள்

251 கிராம பஞ்.,ல் ஒகேனக்கல் குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டுகோள்

251 கிராம பஞ்.,ல் ஒகேனக்கல் குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டுகோள்

251 கிராம பஞ்.,ல் ஒகேனக்கல் குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டுகோள்

ADDED : ஜூன் 30, 2024 01:55 AM


Google News
தர்மபுரி,

நாளொன்றுக்கு தனி நபருக்கான, 85 லிட்டர் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், முழுவதும் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், கிராமப்புற மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தன்னெழுச்சியாக போராட்டம் மொரப்பூர், கடத்துார், பென்னாகரம், நல்லம்பள்ளி ஆகிய வட்டாரங்களில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு, 251 கிராம பஞ்.,களில் உள்ள அனைவருக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து பஞ்.,களில் இருக்கும் சிறுவிசை குடிநீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகங்கள் ஆகியவைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. அதை பஞ்.,களின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு தனி நபருக்கு சட்டப்படி வழங்க உரிமையான, பொது கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் நீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு, 55 லிட்டர் தண்ணீர் மற்றும் குடிக்க, சமையல் செய்ய, 30 லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் என, 85 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் குடிநீர், 3 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மட்டும் வழங்கப்படுகிறது. எனவே, இது போன்ற குறைபாடுகளை தவிர்த்து, சட்டப்படி அனைவருக்கும் தினமும் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us