ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அக்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோடியூரில், திரிபுரசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் புகழ்சோழ நாயனார் மடாலயம் உள்ளது.
இக்கோவிலில், 3ம் ஆண்டு குருபூஜை மற்றும் முப்பெரும் விழா நடந்தது. விழாவில், மாணிக்கவாசகர் திருமடத்தின், 57வது ஜகத்குரு மாணிக்க வாசக சுவாமி, வேளக்குறிச்சி ஆதீனம், 18வது குரு மகா சன்னிதான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிலில் கும்ப பூஜை மற்றும் பசுபதீஸ்வரக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.