ADDED : ஜூலை 08, 2024 05:43 AM
கம்பைநல்லுார், : காரிமங்கலம் தாலுகா கொன்றம்பட்டியை சேர்ந்தவர் தர்மன், 41; இவரது ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை கடந்த, 3ல் நண்பர் முருகன் என்பவர் வாங்கிச் சென்றுள்ளார். அவர் இருமத்துாரில் தன் கோழிக்
கடையின் முன், காலை, 9:00 மணிக்கு நிறுத்திய பைக் மாயமானது.
இது குறித்து தர்மன் புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் சின்ன சந்திரப்பட்டியை சேர்ந்த வசந்த், 24, என்பவரை கைது செய்-தனர்.