அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 01:47 AM
தர்மபுரி, ;பணி நிரந்தரம், பென்ஷன், பணிக்கொடை வழங்கக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட இணை செயலாளர் சேகர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது. ஆனால், இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உதவியாளர்கள் இதுவரை நிரந்தரம் செய்யவில்லை. இந்த திட்டத்தில், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கைம்பெண்கள், பெரும்பான்மையோர் பணியாற்றி வருகின்றனர்.
வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம், முறையான குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை கேட்டு, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனவே, அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேணடும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய் உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.