ADDED : மார் 23, 2025 01:29 AM
பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு குறித்து, பல்வேறு மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்ற, கூட்டு நடவடிக்கை குழு ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை மறைப்பதற்காக, தமிழக அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து வலியுறுத்தி வருகிறது. இதை கண்டித்தும், தர்மபுரி மாவட்டத்தில், பா.ஜ.,வினர் தங்களது வீடுகளின் முன், கறுப்பு கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, தர்மபுரி டவுன் சூடாமணி தெருவில் உள்ள, பா.ஜ., மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா, வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்பட நிர்வாகிகள், கறுப்பு கொடி ஏந்தி, தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.