ADDED : மார் 12, 2025 08:01 AM
அரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அரூர் அடுத்த வேப்பம்பட்டியில், தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 300 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். விழாவில், அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் தென்னரசு, சுரேஷ், ராஜேந்திரன், அருள், ரங்கசாமி, பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.