/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.18.65 கோடி மதிப்பில் பணிகள் குறித்து ஆய்வு ரூ.18.65 கோடி மதிப்பில் பணிகள் குறித்து ஆய்வு
ரூ.18.65 கோடி மதிப்பில் பணிகள் குறித்து ஆய்வு
ரூ.18.65 கோடி மதிப்பில் பணிகள் குறித்து ஆய்வு
ரூ.18.65 கோடி மதிப்பில் பணிகள் குறித்து ஆய்வு
ADDED : ஜூலை 07, 2024 05:45 AM
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதி அத்திமுட்லு பஞ்.,ல் உள்ள குமாரசெட்டி ஏரி மற்றும் கால்வாய் சீரமைக்கும் பணிக்கு, 18.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பிறகு பணிகள் கடந்த, 2022ம் ஆண்டு தொடங்கியது. இதில், 25 கி.மீ., துாரம் கால்வாய் சீரமைத்தல், குமாரசெட்டி ஏரி கரையை உயரப்படுத்தி சீரமைத்தல், ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதியில் உள்ள, 14 தடுப்பணைகள் சீரமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது. இதன் மூலம், 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைய உள்ளது. பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் ஆய்வு செய்தார்.