ADDED : மார் 12, 2025 08:00 AM
தர்மபுரி: வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியிலுள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூ-னேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் அபிதகு-ஜாம்பாள் ஆருண்ணேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஷ்-வரர் மற்றும் சோளேஷ்வரர், தர்மபுரி டவுன் ஆத்துமேடு
சர்வாங்-கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர், அரசநாதர், லளிகம் மல்லிகார்-ஜூன ஈஸ்வரர், பி.எஸ்.அக்ரஹாரம் மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்க சகாய ஈஸ்வரன், கொளகத்துார் புற்றிடங்கொண்ட நாதர் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள, பல்வேறு சிவன் கோவில் களில் சிறப்பு பூஜை நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் மாசிமாத வளர்பிறை பிர-தோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆரா-தனை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகி-ரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகிய-வற்றில் சிறப்பு பூஜை நடந்தது.