/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு 'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு
'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு
'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு
'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 12, 2025 08:00 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டு மையத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும் வட்-டத்தில், தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு-கிறது. இது முற்றிலும் இலவசம். தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், 2023 - 20-24ம் ஆண்டு தொகுதி, -4 தேர்விற்கு, 70 மாண-வர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட, 'குரூப்- - 4' தேர்வில் தர்மபுரி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதினர். அதில் வெற்றி பெற்று, 15 மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் தேர்வாகி பணியில் சேர்ந்தனர். அவர்களை நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் பாராட்-டினார். அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா உடனிருந்தார்.