/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வீட்டை இடிக்க முயற்சி;தி.மு.க., பஞ்., தலைவரின் கணவர் மீது பெண் புகார் வீட்டை இடிக்க முயற்சி;தி.மு.க., பஞ்., தலைவரின் கணவர் மீது பெண் புகார்
வீட்டை இடிக்க முயற்சி;தி.மு.க., பஞ்., தலைவரின் கணவர் மீது பெண் புகார்
வீட்டை இடிக்க முயற்சி;தி.மு.க., பஞ்., தலைவரின் கணவர் மீது பெண் புகார்
வீட்டை இடிக்க முயற்சி;தி.மு.க., பஞ்., தலைவரின் கணவர் மீது பெண் புகார்
ADDED : ஜூலை 07, 2024 05:46 AM
அரூர் : அரூர் அருகே தனது வீட்டை இடிக்க, தி.மு.க., பஞ்., தலை-வரின் கணவர் முயற்சிப்பதாக பெண் புகார் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., அருந்-ததியர் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்த சத்யா, 26, என்பவர் பொது வழிப்பா-தையை ஆக்கிரமித்து, புதிதாக தார்சு வீடு கட்டுவதற்கு பில்லர் அமைத்துள்ளதாகவும், அதனை அகற்ற கோரி, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர் ராணியின் கணவர் முத்து தலைமையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த, 3ல், மறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், வி.ஏ.ஓ., அம்பேத் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பொது வழிப்பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால், அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில் நேற்று, 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் முன்னிலையில், பொதுவழிப்பாதை அளவீடு செய்யப்பட்டு முட்டுக்கல் நடப்பட்-டது.
இந்நிலையில். தி.மு.க., பஞ்., தலைவர் புதிதாக வாங்கியுள்ள விவசாய நிலத்திற்கு செல்வதற்காக தனது வீட்டை இடிக்க முயற்-சிப்பதாக சத்யா புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதா-வது: ஆறு மாதத்திற்கு முன்பு, ராணியின் கணவர் முத்து புதிதாக விவசாய நிலம் வாங்கியுள்ளார். எனது வீட்டின் வழியாக தான் அந்த நிலத்திற்கு செல்ல வேண்டும். விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை என் வீட்டின் அருகே குறுகலாக உள்ளதால், நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு உள்ளதாக கூறி, அடியாட்க-ளுடன் எனது வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கோட்டப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவ-டிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து முத்து கூறுகையில்,''போலீஸ் பாதுகாப்புடன் வரு-வாய்த்துறையினர் அளவீடு செய்து சென்றுள்ளனர். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எனது நிலத்திற்கும், பொதுவழிப்பா-தைக்கும் சம்மந்தம் இல்லை. காழ்ப்புணர்ச்சியால் தன்மீது புகார் கூறுகிறார்,'' என்றார்.