/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு
ADDED : மார் 15, 2025 02:19 AM
தொழில் முனைவோர்பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தர்மபுரி:தமிழக அரசின் பட்ஜெட்டை, பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.தர்மபுரி டிஸ்டிரிக்ட் இண்டஸ்ட்ரிஸ் அசோசியேஷன் தலைவர், வினோத் கே.தனசேகரன்: தமிழக அரசு பட்ஜெட்டில் தொழில்துறைக்கு, 3,915 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு, 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது. இது வரவேற்கத்தக்கது. இதனை தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள, தொழில் குறித்த இலவச பயிற்சி மையம் தொடங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், அதிகம் விளையக்கூடிய சிறுதானியங்கள், காய்கறிகள் இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர், ஜெ.பிரதாபன்: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக மத்திய அரசு தர வேண்டிய, 2,152 கோடி ரூபாய் நிதியை தர மறுக்கும் நிலையில், தமிழக அரசே, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததுடன், மூன்று மொழி கொள்கையை ஏற்காமல், இரு மொழி கொள்கையை தொடர்வோம் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.