/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு
ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு
ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு
ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு
ADDED : மார் 15, 2025 02:22 AM
ஊரக நலப்பணிகள் கூடுதல்இயக்குனர் ஜி.ஹெச்.,ல் ஆய்வு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வந்த தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் சித்ரா தலைமையிலான, நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தைகள் பிரிவு, அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டதுடன், நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து ஊரக நலப்
பணிகள் கூடுதல் இயக்குனர் சித்ரா கேட்டறிந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் டயாலிசிஸ் அறை மற்றும் கூடுதல் கட்டடங்கள், கழிப்பறை, குடிநீர், சுற்றுப்புறத் துாய்மை, ஆய்வகங்கள், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் அறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள சமையலறைக்கு சென்று சுகாதாரமாக உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணன் உடனிருந்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட வி.சி., செயலர் சாக்கன் சர்மா, அரூர் அரசு மருத்துமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டும். கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவ குழுவினரிடம் மனு அளித்தார்.