ADDED : ஜூன் 22, 2025 02:05 AM
கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சிறப்பு விருந்தினராக வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா பங்கேற்றார்.
பள்ளி துணை முதல்வர் மீனாட்சி, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பலவித யோகாசனங்களை செய்தனர்.