/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினம் ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினம்
ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினம்
ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினம்
ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2025 02:06 AM

சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்தனர்.
சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. பா.ஜ., மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வர்த்தக ஆய்வாளர் அன்பரசன் யோகா செய்தார்.
விழாவில் யோகா ஆசிரியர் நடராஜன், ராணி சீதை ஆச்சி பள்ளி ஆசிரியர் முருகவேல் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் மணிகண்டன் செய்திருந்தார்.
பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் நாகேஸ்வரன் பாபு நன்றி கூறினார்.