ADDED : செப் 01, 2025 06:55 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுாலகர் தினம் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் சி.பி.ராமசாமி அய்யர் நுாலகத்தில், நுாலக அறிவியல் தந்தை ரங்கநாதன் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் சிவராமன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் அருள் தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்க பரிசு வழங்கப்பட்டது. கல்விபுல முதல்வர் அம்பேத்கர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் நுாலக தகவல் தொடர்பியல் தலைவர் ரவி ஆகியோர் பேசினர்.
உதவி நுாலகர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.