/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம் மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்
மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்
மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்
மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலை விஜர்சனம்
ADDED : செப் 01, 2025 06:54 AM

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 26 விநாயகர் சிலைகள் நேற்று மங்கலம்பேட்டை, ரூபநாராயணநல்லுார் ஏரிகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 27ம் தேதி, மங்கலம்பேட்டை மற்றும் கர்னத்தம், பள்ளிப்பட்டு, ரூபநாராயணநல்லுார், மு.அரகம் உள்ளிட்ட கிராமங்களில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 10:30 மணியளவில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
இந்து முன்னணி மாநில செயலாளர் சனில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை நகர தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் மணிகண்டன், பா.ஜ., பிரசார பிரவு மாநில செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது,. மாலை 5:00 மணியளவில் விநாயகர் சிலைகள் மங்கலம்பேட்டை, ரூபநாராயணநல்லுார் ஏரிகளில் கரைக்கப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், 7 டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 50 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.