உலக வன நாள் விழா மரக்கன்றுகள் நடல்
உலக வன நாள் விழா மரக்கன்றுகள் நடல்
உலக வன நாள் விழா மரக்கன்றுகள் நடல்
ADDED : மார் 24, 2025 06:10 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வனத்துறை சார்பில் உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம், கார்குடல் கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் டாக்டர் சாமிநாதன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லுாரி மாணவிகள் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு, கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, வேப்பூரில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனவர் சஞ்சீவி, வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் உடனிருந்தனர்.