/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சமுதாய வளைகாப்பு விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு சமுதாய வளைகாப்பு விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
சமுதாய வளைகாப்பு விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
சமுதாய வளைகாப்பு விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
சமுதாய வளைகாப்பு விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மார் 24, 2025 06:11 AM

கடலுார், : கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி சமுதாய நலக்கூடத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்று, விழாவை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். விழாவில், மேற்பார்வையாளர் மீனா, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், பிரகாஷ், முன்னாள் அவைத் தலைவர் தில்லைகோவிந்தன், முன்னாள் துணை செயலாளர் சேகர், ஊராட்சி செயலர் ரமேஷ் நிர்வாகிகள் தாமோதரன், வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.