கடலுார், : கடலுார் அடுத்த கரைமேடு பாசார் புதுநகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சிவானந்தம், 28; இவர், தெருவில் விளையாடி சிறுவர்களை விரட்டியுள்ளார். இதனை, அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான பழனிவேல், 46; தட்டிகேட்டு, சிவானந்தத்தை தாக்கினார்.
இதுகுறித்த புகாரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.