/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்
ADDED : செப் 22, 2025 11:28 PM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் வாண்டியாம்பள்ளம் கிராம மக்கள் மற்றும் மா.கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
குறிஞ்சிப்பாடி அடுத்த வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு விதிகளை மீறி அதிகார தலையீடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் காலை உணவு திட்ட வங்கிக் கணக்கில் போலி ஆவணங்களை தயார் செய்து முறைகேடு செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.எல்.எப்., கீழ் உள்ள 27 மகளிர் சுய உதவி குழுக்களின் சேமிப்புத்தொகை 35 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயற்சிக்கும் வெளிநபர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மா.கம்யூ.,ரெட்டியார்பேட்டை கிளை செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். வைத்தியலிங்கம், அல்லிமுத்து, ஆறுமுகம், ஏழுமலை, பாலு முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், ராஜேஷ்கண்ணன், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க அறிவுறுத்தினர்.