/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா
விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா
விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா
விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா
ADDED : செப் 22, 2025 11:28 PM

சிதம்பரம் : சிதம்பரம் காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், ரமேஷ், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, நடராஜன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். சங்க ஆலோசகர் சின்னப்பா, கொடியேற்றி வைத்தார். முன்னதாக கோவில் வளாகத்தில் விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விஸ்வகர்ம சமூக மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். வாழ்வாதாரம் மேம்பட தேசிய கைவினை தொழிலாளர் நலவாரியம், தேசிய பொற்கொல்லர் நலவாரியம், தேசிய சிற்பகலா அகாடமி ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
விழாவில், நடராஜன், சாமிநாதன், கனகசபை, உமாபதி, சிவக்குமார், கிருஷ்ணகுமார், சிவக்குமார், பாலாஜி, சிதம்பரநாதன், சேகர், வினோத்குமார், முருகன், ராஜா பங்கேற்றனர். நகர பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.