/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: தினகரன்
ADDED : செப் 04, 2025 08:48 AM
காட்டுமன்னார் கோவில்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் அறிவித்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
கடந்த லோக்சபா தேர்தலுக்காக, அ.ம.மு.க., - தே.ஜ., கூட்டணியில் இணைந்தது. அதன்பின், அக்கூட்டணியில் தான் தொடர்ந்தோம்.
ஆனால், சமீப காலமாக அக்கூட்டணியில் நிலவும் நிச்சயமற்ற போக்கு வேதனையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், அ.ம.மு.க., தொடர்ச்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அக்கூட்டணியில் இருந்து விலகுகிறோம். அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதை வரும் டிசம்பரில் அறிவிப்போம். அப்போது, யாரோடு கூட்டணி என்பது குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு நாட்களுக்கு முன் தே.ஜ., கூட்டணி யில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.