/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் கடை திறப்பு எப்போது கிராம மக்கள் எதிர்பார்ப்பு ரேஷன் கடை திறப்பு எப்போது கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ரேஷன் கடை திறப்பு எப்போது கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ரேஷன் கடை திறப்பு எப்போது கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ரேஷன் கடை திறப்பு எப்போது கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:49 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை திறக்கப்படாமல் உள்ளது.
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது மலையடிக்குப்பம். இங்கு, ரேஷன் கடைக்கு செ்ாந்த கட்டடம் இல்லாததால் தற்காலிகமாக கோவில் இடத்தில் உள்ள சிறிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இது பழமையான கட்டடம் என்பதால் மழைகாலங்ககளில் ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகிறது. சிறிய இடம் என்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு திட்ட நிதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் ரேஷன் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசின் நிதி வீணாகிறது. பழைய இடத்தில் நெருக்கடிக்கு மத்தியில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, புதிய ரேஷன் கடையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.