/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 5 டன் ரேஷன் பொருள் கடத்த முயன்றவர் கைது 5 டன் ரேஷன் பொருள் கடத்த முயன்றவர் கைது
5 டன் ரேஷன் பொருள் கடத்த முயன்றவர் கைது
5 டன் ரேஷன் பொருள் கடத்த முயன்றவர் கைது
5 டன் ரேஷன் பொருள் கடத்த முயன்றவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 11:48 PM

பண்ருட்டி: பண்ருட்டியில் இருந்து புதுச்சேரிக்கு 5 டன் ரேஷன் பொருட்கள் கடத்த முயன்றரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, திருநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்,48; இவர், கும்பகோணம் சாலை உள்ள கடையில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக பறக்கும் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா தலைமையில் பறக்கும்படை தாசில்தார் ராஜேஷ்பாபு, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 5 டன் ரேஷன் அரிசி, 500 கிலோ சர்க்கரை, 250 கிலோ கோதுமை, 275 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு, மினிவேனில் புதுச்சேரிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து பறக்கும்படை குழுவினர் ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்து, கடலுார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.